கால் இறுதியில் கச்சனோவ்: விம்பிள்டன் டென்னிஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 109-ம் நிலை வீரரான போலந்தின் கமில் மஜ்கர்சாக்குடன் மோதினார். இதில் கரேன் கச்சனோவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் கரேன் கச்சனோவ், 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதுகிறார். டெய்லர் ஃபிரிட்ஸ் தனது 4-வது சுற்றில் 44-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்