உலக குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்றார் சாக்‌ஷி!

அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து விளையாடினார்.

இதில் தனது அதிரடியான தாக்குதல்களால் யோஸ்லின் பெரேஸை நிலைகுலையச் செய்தார் சாக்‌ஷி. இதனால் 3 நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி சாக்‌ஷி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் வென்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்