வில்வித்தையில் இந்தியா பதக்க வேட்டை!

ஷாங்காய்: சீ​னா​வின் ஷாங்​காய் நகரில் வில்​வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் பிரிவு இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் மதுரா தாமங்​கோங்​கர் 139-138 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் கார்​சன் கிராஹேவை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

ஆடவருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் அபிஷேக் வெர்​மா, ஓஜஸ் தியோடேல், ரிஷப் யாதவ் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 232-228 என்ற கணக்​கில் மெக்​சிகோ அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்