இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்: 3 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம் - ENG vs IND 2வது டெஸ்ட்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷூப்மன் கில் 269 ரன்கள் விளாசி அசத்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 2, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, நித்திஷ் குமார் ரெட்டி 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 114, ரவீந்திர ஜடோ 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்